உலக சுகாதார அமைப்பின் சோதனைகளில் இந்தியா பங்கேற்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR - Indian Council of Medical Research) அறிவித்துள்ளது.
கோவிட் – 19 தொற்றுநோய் வெடிப்பைச் சரி செய்வதற்கான சாத்தியக் கூறிற்காக இந்தச் சோதனையானது மேற்கொள்ளப்படுகின்றது.
இந்தத் தொற்றுநோய்ப் பாதிப்பு 940 ஆக அதிகரித்திருக்கும் நிலையில், WHOன் இந்தக் கூட்டு முயற்சி சோதனையில் இந்தியா பங்கேற்கத் தகுதி பெற்று உள்ளது.